தவுட்ல இருந்து எரிவாயு (gas):
கிழே கண்டுள்ள நிழல் படத்தில் உள்ளவரின் பெயர் நாகராஜன்.
கடலூரை சேர்ந்த இவர் சிதம்பரத்துல MSC., Software Engineering final year படிக்கிறார்.
இவருடைய கண்டுபிடிப்பு ஒரு மகத்தான வெற்றிய தந்து உள்ளது. தவுட்ல இருந்து எரிவாயு (gas) கண்டுபிடிச்சிருக்கிறார். இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அத சூடு படுத்தினா,காஸ் உருவாகி அந்த டப்பால செட் பண்ணிய சின்ன குழாய் மூலமா வெளியேற்றப்படுது. அதை தீக்குச்சியால் கொளுத்தியபோது நீல நிறத்துல எரிந்தது. இந்த எரிவாயுவை சிலிண்டர்ல அடைத்து அடுப்பு எரிக்க பயன்படுத்த முடியும்னு நாகராஜன் தெரிவித்து உள்ளார். ஒரு முக்கியமான தகவல் இந்த புதிய எரிவாயுவ கண்டுப்பிடிச்ச நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாளி.
பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு
பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.
''தற்போது உள்ள சவாலான விஷயம் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன் உதாரணம்தான், காந்த விசையின் மூலம் இயங்கும் இந்த இன்ஜின். இது அதிக வெப்பத்தை வெளிவிடாது, குறைந்த எடையுடையது, அதிக இடத்தையும் ஆக்கிரமிக்காது. மின்வெட்டுக்கும தீர்வாகிறது. இதனை ஜெனரேட்டராகவும் பயன்படுத்தலாம். இந்த இன்ஜினுக்குள் ஏற்படும் காந்த விசையின் அளவுக்கு ஏற்ப மின்சாரத்தையும் தயாரிக்கலாம்'' என்கிறார் வெங்கடேஷ்..
மேலும் 'தான் ஒரு இயற்கை விஞ்ஞானி’ என்கிறார் வெங்கடேஷ்.
wow
ReplyDeleteThank you friend...! :)
Delete